|
Friday Nov 14, 2008 தமிழில் விக்ரமுடன் கந்தசாமி படத்திலும், சரத்குமார் ஜோடியாக ஜக்குபாய் படத்திலும் நடித்து வரும் ஸ்ரேயா, அசோக் அமிர்தராஜின் ஹாலிவுட் படத்தில் நடித்து முடித்து விட்டார்.
இதையடுத்து பாலிவுட்டின் பிரபல பெண் இயக்குனர் தீபா மேத்தா இயக்கத்தில் மற்றொரு ஆங்கில படத்திலும் நடித்து வருகிறார். இதுதவிர தலா இரண்டு இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் அம்மணி, விஷாலுடன் புதிய படம் ஒன்றில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க பேச்சுவார்த்தையில் இருக்கிறார். மொத்ததில் அம்மணி தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என்ற 4 மொழிகளிலும் ஸ்ரேயா பிஸி...! Click here for Shriya Photo Gallery
|