|
Thursday Nov 13, 2008 நடிகை ப்ரியாமணி நீச்சல் உடையணிந்து ரசிகர்களை கிறங்கடிக்க தயாராகி வருகிறார். பாலிவுட் படங்களைப் போன்று தமிழ் படங்களிலும் நீச்சல் உடை கலாச்சாரம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
பிகினி உடையணிய தயங்கி வந்த முன்னணி நடிகைகள் பலர் இப்போது பிகினிக்கு ஓ.கே., சொல்லி வருகிறார்கள். பில்லா படத்தில் நயன்தாரா நீச்சல் உடையில் நடித்ததைத் தொடர்ந்து மற்ற நடிகைகளும் நீச்சல் உடை ஆசை வந்து விட்டது. ஏற்கனவே சர்வம் படத்தில் நடித்து வரும் த்ரிஷா நீச்சல் உடை தரிசனம் தருகிறார். இவரைத் தொடர்ந்து நடிகை ப்ரியமணி தெலுங்கு படமொன்றில் நீச்சல் உடையில் நடிக்கவிருக்கிறார். தெலுங்கில் நிதினுக்கு ஜோடியாக நடிக்கும் துரோனா படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியில்தான் ப்ரியாமணியின் நீச்சல் உடை தரிசனம் கிடைக்கப் போகிறதாம்.
|