|
Thursday Nov 13, 2008 நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து எப்போது பேசினாலும் குழப்பமான பதிலையே தருவார். மாமனார் குழப்பத்தில் இருப்பது போலவே அவரது மருமகன் தனுஷூம் இப்போது குழப்பத்தில் இருக்கிறார்.
தனுஷின் அகில இந்திய ரசிகர் மன்ற தலைவர் கவுசிக், மேற்படிப்பிற்காக வெளிநாடு போய்விட்டதால், அவருக்கு அடுத்தபடியாக பொறுப்பில் இருக்கும் டேவிட் என்பவர் இந்த செலவு, அந்த செலவு என கணக்கு காட்டி பணம் கேட்டு தனுஷை மிரட்டி வருகிறாராம். அதெல்லாம் தண்ட செலவு என்று கூறி தொகையை தனுஷ் கொடுக்க மறுத்ததால் சூட்டிங்கிற்காக கோடம்பாக்கத்துக்குள் வந்துதானே ஆக வேண்டும் என்று மிரட்டல் விடுத்திருக்கிறாராம் அந்த வடபழனி ஆசாமி. இதனால் குழப்பத்தில் இருக்கும் தனுஷ், இதற்கு மாற்று என்ன? என்று மாமியார் லதா ரஜினியிடம் கேட்டிருக்கிறார். அவரது ஆலோசனையின் பேரில் விரைவில் ரசிகர் மன்ற கூட்டத்தை கூட்டவிருக்கிறாராம் தனுஷ்.
|