|
Wednesday Nov 12, 2008 புதிய படமொன்றில் 10 புதுமுக நடிகைகள் அறிமுகமாகிறார்கள். கரகாட்டகாரன் படத்தை தயாரித்த கருமாரி - கந்தசாமி, ஜே.துரை ஆகியோர் நீண்ட இடைவெளிக்கு பிறகு படம் தயாரிக்கிறார்கள்.
இவர்கள் தயாரிக்கும் புதுப்படத்துக்கு எல்லாம் அவன் செயல் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் மலையாள நடிகை பாமா உள்பட 10 நடிகைகள் அறிமுகமாகிறார்கள். இதுதவிர நடிகர் வடிவேலு வண்டு முருகேசன் என்ற வக்கீல் கேரக்டரில் நடித்துள்ளார். ஆசிஷ் வித்யார்த்தி, நாசர், மணிவண்ணன், விசு, மனோஜ், தலைவாசல் விஜய், ஆர்.கே., என நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகிறார்கள்.
|