|
Wednesday Nov 12, 2008 பெரிய திரையில் சாதித்து விட்டு, சின்னத்திரைக்கு வந்து சாதித்துக் கொண்டிருக்கும் நடிகை குஷ்பு பாடகி அவதாரம் எடுத்துள்ளார்.
ராஜ் டிவி., நிறுவன தயாரிப்பில் டி.பி.கஜேந்திரன் இயக்கி வரும் படம் மகனே என் மருமகனே. இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை நடிகை குஷ்பு பாடியிருக்கிறார். நட்சத்திரம் நட்சத்திரம் பூமியில் பாரு... தினம் ராத்திரியில் உன் கனவில் வருவது யாரு... என்று தொடங்கும் அந்த பாடலை எழுதியிருப்பவர் சினேகன். இப்பாடலுக்கு இசையமைப்பாளர் தினா இசையமைத்துள்ளார். பாடகி அவதாரம் குறித்து நடிகை குஷ்பு கூறுகையில், முதலில் நான் பாட்டு பாட மறுத்தேன். கஜேந்திரன் சார் தொடர்ந்து வலியுறுத்தியதால் சம்மதித்தேன். தினாதான் எனக்கு பாட்டு பாட சொல்லிக் கொடுத்தார். கவிஞர் சினேகனின் வரிகளும் என்னை பாட்டு பாட ஊக்குவித்தது, என்றார்.
Click here for Kushboo Photo Gallery
|