|
Tuesday Nov 11, 2008 நடிகர் விஷாலுடன் நடிகை ஸ்ரேயா ஜோடி சேரவுள்ளார். ஜி.கே. பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா தயாரிக்கும் படம் தோரணை.
இந்த படத்தை டைரக்டர் பூபதி பாண்டியனின் உதவியாளராக இருந்த ஐயப்பன் இயக்குகிறார். மலைக்கோட்டை சூட்டிங்கின்போது, ஐயப்பன் சொன்ன இந்த கதை தனக்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் உடனடியாக ஓ.கே., சொல்லியிருக்கிறார் விஷால். படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க நடிகை ஸ்ரேயாவிடம் கேட்டிருக்கிறார்கள். வெற்றி நாயகன் என்று பெயரெடுத்த விஷாலுடன் ஜோடி போட டபுள் ஓ.கே., சொல்லியிருக்கிறார் ஸ்ரேயா. தோரணை படத்தை முடித்த பின்னர் நடிகர் விஷால், செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பது கொசுறு தகவல்.
Click here for Shriya Photo Gallery
|